ETV Bharat / state

கிராமுக்கு வெறும் ரூ.1 குறைந்த தங்கம்.. ஏமாற்றத்தில் நகைப் பிரியர்கள்! - இன்று தங்கத்தின் விலை

Today gold rate: தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலையானது, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை வர்த்தக சந்தை தொடங்கிய நிலையில், தங்கம் விலை கிராமுக்கு வெறும் ரூ.1 குறைந்து ஏமாற்றமளித்துள்ளது.

Today gold rate
கிராமுக்கு வெறும் 1 ரூபாய் குறைந்த தங்கம்!... ஏமாற்றத்தில் நகைப்பிரியர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:21 PM IST

சென்னை: இந்திய மக்களின் சேமிப்பு என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்று எண்ணம் தங்கம். தங்கம் எப்போதும், அதற்கு தனி மதிப்பு உண்டு. முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய உதவுகோலாக தங்கம் விளங்கி வருகிறது.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. ஆகையால் தான் தினமும் தங்கத்தின் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது.

ஆனால் வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து தங்கம் இன்று குறையும் என நகை முதலீட்டாளர்களும், நகைப்பிரியர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை உடைக்கும் விதமாக தங்கத்தின் விலையானது வெறும் 1 ரூபாய் மட்டுமே குறைந்து பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

மேலும் வார இறுதி நாளில் தங்கம் சற்று அதிகரித்த நிலையில், வாரத்தின் முதல் நாள் இன்று வர்த்தக சந்தை தொடங்கிய நிலையில் தங்கத்தின் மதிப்பு குறையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது என கூறப்படுகிறது.

தங்கம் விலை: சென்னையில் இன்று (செப்.25) ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 160க்கு விற்பனையாகிறது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5 ஆயிரத்து 520க்கும், சவரனுக்கு வெறும் ரூ.8 குறைந்து ரூ.44 ஆயிரத்து 160க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.5 ஆயிரத்து 990க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.79க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79 ஆயிரத்திற்கும் விற்பனை ஆகி வருகிறது.

இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 25)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,520
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,160
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,990
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 47,920
  • 1 கிராம் வெள்ளி - ரூ.79
  • 1 கிலோ வெள்ளி - ரூ.79,000

இதையும் படிங்க: நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரூ.60 கோடியா! அப்படி என்ன விஷேசம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.