சென்னை: இந்தியாவில் எப்போதுமே மக்கள் எதிர்காலத் தேவைக்கான சேமிப்பை தங்கத்தில் தான் அதிக அளவில் முதலீடு செய்வார்கள். நடுத்தர குடும்பத்தில் இருந்து, உயர்தர குடும்பம் வரை நகை எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி தான் செய்கின்றனர். அதன் முக்கிய காரணம் முதலீடு தான் எனலாம்.
வருங்கால அத்தியாவசிய மற்றும் எதிர்பாராத தேவைக்கு கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் என்று கூட சொல்லலாம். அப்படி சேர்க்கும் தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை (commodity market) பொருத்தே நிர்ணயம் செய்யபடும். இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கம் என காணப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 520க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 160க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.78க்கும், கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து ரூ.78 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 12)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,520
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,160
- 1 கிராம் வெள்ளி - ரூ.78
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,000