ETV Bharat / state

அதிரடி சரிவை சந்தித்த தங்கம்.. இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா? - இன்று தங்கத்தின் விலை

Today Gold price in chennai: சென்னையில் இன்று 7வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு 42 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Today Gold in chennai
அதிரடி சரிவை சந்தித்த தங்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 2:10 PM IST

சென்னை: இந்திய மக்களின் மனதில் சேமிப்பு என்றாலே, முதலில் தோன்றும் எண்ணம் தங்கம். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய முதலீடு மற்றும் உதவும் பொருளாக பார்க்கப்படுவது தங்கம் போன்ற நகை ஆபரணங்கள் மட்டும்தான்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு, முதலீட்டாளர்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலையானது, சர்வதேசப் பொருளாதர சூழலில் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்து நீர்ணயம் செய்யப்பட்டுகிறது. இதனால் தங்கத்தின் விலையில் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்படும்.

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்: செப்டம்பர் 26ஆம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்த தங்கம், ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து, 44 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றது. மேலும் கடந்த வாரம் அதிரடியாக திடீர் சரிவைச் சந்தித்த தங்கம், கிராமுக்கு ரூ.70, சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கு விற்கப்பட்டது. அதேபோல இன்றும் அதிரடியாக சவரனுக்கு ரூ.528 குறைந்துள்ளது.

42 ஆயிரத்துக்கு வந்த தங்கம்: தற்போது உலகச் சந்தையில் அமெரிக்கா நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும், டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கத்தின் மீதான தாக்கம் மற்றும் தேவை குறைந்து காணப்படுகிறது. ஆகையால், தங்கத்தின் விலை குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆகையால், 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தங்கத்தின் விலை குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) கிராமுக்கு ரூ.66 குறைந்து, ரூ.5 ஆயிரத்து 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.528 குறைந்து, ரூ.42 ஆயிரத்து 320க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46 ஆயிரத்து 80-க்கும், வெள்ளி விலை ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,000 குறைந்து, ரூ.73 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம் - (அக்.3)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,290
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.42,320
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,760
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.46,080
  • 1 கிராம் வெள்ளி - ரூ.73.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.73,500

இதையும் படிங்க: IND Vs NED: இந்தியா - நெதர்லாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.