சென்னை: இந்திய மக்கள் எப்போது எதிர்காலத்திற்கான சேமிப்பை 2 விஷயங்களில் தான் அதிகம் முதலீடு செய்வார்கள். ஒன்று அசையா சொத்துக்களான நிலம், வீடு போன்றவை. மற்றொன்று, தங்கம் போன்ற நகை ஆபரணங்கள். நடுத்தர குடும்பத்தில் இருந்து, உயர்தர குடும்பம் வரை நகை எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி சேர்க்கத் தான் செய்கின்றனர். அதன் முக்கிய காரணம் முதலீடே எனலாம்.
வருங்கால அத்தியாவசிய அல்லது எதிர்பாராத தேவைக்கு கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை (commodity market) பொருத்தே நிர்ணயம் செய்யபடும். இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டு திருமணங்களில் தங்க ஆபரணங்கள் இன்றியமையாதது. இதற்காக திருமண பேச்சுகள் நடைபெறும் குடும்பங்கள் தங்கத்தின் விலையை ஏப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில், அடுத்து பல முகூர்த்த தேதிகள் எதிர் நோக்கி வரும்போது, தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஆடி என்பதால், எந்தவித வீட்டு விசேஷமும் நடைபெறாது. ஆகையால், நாளுக்கு நாள் தங்கம் குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், ஆடி மாதம் முடிந்தவுடனே தங்கம் தனது வேலையைக் காட்டத் துவங்கியது. மேலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது, ஏற்றத்துடன் இருந்த நிலையில், இன்று (செப். 9) திடீரென குறைந்துள்ளது. அதனால் இல்லத்தரசிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது சென்னையில் இன்று (செப்.9) ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 80க்கு விற்பனையாகிறது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5 ஆயிரத்து 510க்கும், சவரனுக்கு ரூ.160 என குறைந்து ரூ.44 ஆயிரத்து 80க்கும் இன்று (செப்.9) விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.5 ஆயிரத்து 980க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77 ஆயிரத்திற்கும் விற்பனை ஆகி வருகிறது.
இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 09)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,510
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,080
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,980
- 1 கிராம் வெள்ளி - ரூ.77
- 1 கிலோ வெள்ளி - ரூ.77,000
இதையும் படிங்க: LIVE: G20 Summit : ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்! உலக தலைவர்கள் பங்கேற்பு!