கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு ஆண்டிற்குப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாது எனவும், ஏற்கனவே காலியாக உள்ள அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் காலி பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களுக்காக தேர்வுகள் நடத்தப்படாது. அதனால் தேர்வினை நடத்துவதில் எந்தவித தடையும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் குரூப் 4, குரூப் 2 தேர்வுகளுக்கான பணியிடங்கள் புதிய பணியிடமாக இருப்பதால், அவற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு!