சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்த உள்ள போட்டித்தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குருப்-2 நேர்காணல் பதவிகள், மற்றும் குருப்-2ஏ நேர்காணல் இல்லாத பதவிகளில் 1,294 இடங்களை நிரப்புவதற்கு அடுத்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
-
2024ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி#etvbharattamil #Tnpsc #timetable #TamilNadu #government pic.twitter.com/pYPIlJxiR1
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2024ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி#etvbharattamil #Tnpsc #timetable #TamilNadu #government pic.twitter.com/pYPIlJxiR1
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 20, 20232024ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி#etvbharattamil #Tnpsc #timetable #TamilNadu #government pic.twitter.com/pYPIlJxiR1
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 20, 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான கால அட்டவணையில், குருப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும். உதவி இயக்குனர் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையில் 2 பணியிடங்களூக்கான (பெண்கள்) அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு மே மாதம் தேர்வு நடத்தப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலம் நிருபர் பணியில் 6 நியமனம் செய்ய பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும். வனத்துறையில் வனக்காவலர் பணியில் 1,264 பேர் நியமனம் செய்ய மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும். குருப் 1 பதவிகளில் 65 இடங்களை நிரப்புவதற்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்படும்.
ஒருங்கிணைந்தப் பொறியியல் பணிகளில் 467 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும். குருப் 2 நேர்காணல் பதவிகள், மற்றும் 2-ஏ நேர்காணல் இல்லாத பதவிகளில் 1,294 இடங்களை நிரப்புவதற்கு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும்.
உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, வனக்காவலர்கள் உள்ளிட்ட 19 வகையான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான குரூப் 4 பணியிடங்கள் ஜனவரியில் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 3,449 காலியிடங்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்படும் எனவும், தேர்வர்களுக்கான பாடத்திட்டம் தேர்வு முறைகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறையின் கீழ் நிரப்ப வேண்டியப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்முறையாக வனத்துறை பணிக்கான தேர்வினை முதல்முறையாக நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகனமழையால் ஸ்தம்பித்த தென்மாவட்டங்கள்; பணிகளை விரைந்து முடிக்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!