ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது!

author img

By

Published : Jan 25, 2020, 1:10 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு  tnpsc scam  tnpsc group 2 exam cheating one arrested  tnpsc group 2 exam cheating one arrested
டிஎன்பிஎஸ்சி முறைகேடு மேலும் ஒருவர் கைது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 12 பேரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (30), 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று எரிசக்தித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வரக்கூடிய திருக்குமரன் (35), திருவல்லிக்கணியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (21) உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், ஒன்பது பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 39ஆவது மாணவராகத் தேர்ச்சி பெற்றுது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ. 532 கோடி வரி ஏய்ப்பு - ஒத்துக்கொண்ட வேலம்மாள்!

Intro:Body:டி.என்.பி.எஸ்.சி முறைக்கேட்டில் ஈடுப்பட்ட மேலும் ஒருவர் கைது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் நேற்றைக்கு 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் வயது 30, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரிந்து வரக்கூடிய திருக்குமரன் வயது 35 மகாபலிபுரம், இந்த தேர்வு முறைகேடுகள் மூலம் வெற்றிபெற்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த நிதிஷ்குமார் வயது 21 உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்...

இந்நிலையில் மேலும் 9 பேரிடம் தொடர்ந்து எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்2 முறைக்கேடு தொடர்பாக ராமேஸ்வரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் கைது.

இவர் குரூப் 2 தேர்வில் 39 மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.