ETV Bharat / state

TNPSC Group1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு

கடந்த நவம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

TNPSC Group1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

author img

By

Published : Apr 28, 2023, 9:28 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதில் மொத்தம் 8 வகைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன. அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது.

இதனை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28) குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதனையடுத்து, குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள், 200 ரூபாய் தேர்வுக் கட்டணம் செலுத்தி, உரிய ஸ்கேன் செய்த ஆவணங்களை மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு என்பது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதையும் படிங்க: TNPSC: டிஜிபி ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா சைலேந்திர பாபு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.