ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி: குரூப்-1சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு - wwwtnpscgovin

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுலவர் பணிக்கு (குரூப்-1சி) முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 13ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

11 மாவட்ட கல்வி அலுவலர் (குருப்-1சி) பணிக்கு விண்ணப்பம்

author img

By

Published : Dec 14, 2022, 6:43 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் மேற்காெள்ளலாம். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும். முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் வெளியிடப்படும்.

கல்வித்தகுதியாக இளநிலை, முதுநிலைப் பட்டத்துடன், பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். அதில் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி (எம்) பிரிவினர் 90 மதிப்பெண்கள், ஏனையோர் 120 மதிப்பெண்களும் பெற்றால் தகுதியாக கருதப்படுவர்.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தின்படி, கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத் தரம்) விரித்துரைக்கும் வகையில் 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

11 மாவட்ட கல்வி அலுவலர் (குருப்-1சி) பணிக்கு விண்ணப்பம்
11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பணிக்கு விண்ணப்பம்

இந்தப் பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IMDbயின் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் 2022

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.