ETV Bharat / state

முறைகேடு எதிரொலி - சென்னையில் மட்டும் நடத்தப்படும் தொல்லியல் அலுவலர் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளின் எதிரொலியாக தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc archaeology exam center change
சென்னையில் மட்டும் நடத்தப்படும் தொல்லியல் அலுவலர் தேர்வு! முறைகேடு எதிரொலியா?
author img

By

Published : Feb 20, 2020, 10:24 AM IST

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொல்லியல் துறையின் தொல்லியல் அலுவலர் பதவிக்கான 18 நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு எழுத சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மையங்களில் எழுத்துத் தேர்வு பிப்ரவரி 29ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த எழுத்து தேர்வினை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுக்கு சென்னை நீங்கலாக இதர தேர்வு மையங்களை தேர்வு செய்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு அது குறித்த தகவல் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்), மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் ’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ’தமிழ் மக்களின் உணர்வுகளை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளோம்’ - கனிமொழி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.