ETV Bharat / state

தற்காலிக இட ஒதுக்கீடு-மாணவர்கள் இன்று மாலைக்குள் உறுதி செய்ய வேண்டும்! - பி.இ

சென்னை: பி.இ, பி.டெக் படிப்பில் சேருவதற்கு முதல் சுற்று கலந்தாய்வு மாணவர்கள், தங்களின் தற்காலிக ஒதுக்கீடு இடங்களை இன்று மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தற்காலிக இட ஒதுக்கீடு-இன்று மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
author img

By

Published : Jul 12, 2019, 1:26 PM IST

தகவல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்காக, முதல் சுற்று கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

அந்த தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற அனைத்து மாணவர்களும் இன்று மாலை 5 மணிக்குள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

பொறியியல் இணையதள கலந்தாய்விற்கு தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் அடிப்படையில் நாலு சுற்றுகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் முதல் சுற்றிற்கு, தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் ஒன்பதாயிரத்து 872 மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அதேபோல் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவைத் தேர்வு செய்வதற்கு ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட ஒன்பதாயிரத்து 872 மாணவர்களில், 1734 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்களிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை ஏழாயிரத்து 705 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்துள்ளனர்.

விரும்பும் கல்லூரிகள், பாடப்பிரிவுகளை பதிவு செய்த மாணவர்களுக்கு உரிய தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் பயனர் குறியீடு, கடவுச்சொல் பயன்படுத்தி தமிழ்நாடு மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்கள் தற்காலிக ஒதுக்கீட்டை இன்று மாலை 5 மணி வரை உறுதி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கான நிரந்தர ஒதுக்கீடு ஜூலை 13ஆம் தேதி காலை இணையதளம் மூலம் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு கல்லூரியில் சேரலாம். முதல் சுற்றில் பதினோராம் தேதி தற்காலிக ஒதுக்கீடு பெற்ற அனைவரும் இன்று மாலை 5 மணிக்குள் ஒதுக்கீட்டினை உறுதி செய்யாவிட்டால் அவர்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் இரண்டாம் சுற்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

எனவே முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அதனை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:பி.இ ,பி.டெக் பொறியியல் படிப்பு தற்காலிக ஒதுக்கீட்டை
இன்று மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்Body:சென்னை, பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு முதல் சுற்றில் கலந்து கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்காலிக இடங்களை இன்று மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , பிஇ பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக முதல் சுற்றில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் 11ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தற்கொலைக்கு ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்கீடு பெற்ற அனைவரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
பொறியியல் ஆன்லைன் கலந்தாய்விற்கு மொத்தம் ஒரு லட்சத்து ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாலு சுற்றுகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் முதல் சுற்றில் தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 9 ஆயிரத்து 872 வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதேபோல் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு ஜூலை 8-ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒன்பதாயிரத்து 872 மாணவர்களில் 1734 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்களிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 7 ஆயிரத்து 705 மாணவர்கள் மட்டும் பதிவு செய்துள்ளனர்.
விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை பதிவு செய்த மாணவர்களுக்கு உரிய தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் லாகின் மற்றும் பாஸ்வேர்ட் பயன் படுத்தி தமிழ்நாடு மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்கள் தற்காலிக ஒதுக்கீட்டை இன்று மாலை 5 மணி வரை (ஜூலை 12ம் தேதி ) ஒதுக்கீட்டை உறுதி செய்யலாம்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கான நிரந்தர ஒதுக்கீடு ஜூலை 13-ஆம் தேதி காலை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு கல்லூரியில் சேரலாம்.
முதல் சுற்றில் பதினோராம் தேதி தற்காலிக ஒதுக்கீடு பெற்ற அனைவரும் இன்று மாலை 5 மணிக்குள் ஒதுக்கீட்டினை உறுதி செய்யாவிட்டால் அவர்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் இரண்டாம் சுற்றுக்கு கொண்டு செல்லப்படும். எனவே முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அதனை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும் என தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.