ETV Bharat / state

மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : Mar 5, 2022, 3:54 PM IST

சென்னை: மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரண்

அதில், "கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணைக் கட்டும் பிரச்சனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.

நியாயம் இல்லை

05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.

முயற்சியை தடுப்போம்

இந்த அறிவிப்பு, வரும் கர்நாடக அரசின் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.