ETV Bharat / state

3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் - Tn weather update

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather
வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Aug 6, 2021, 2:06 PM IST

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய மூன்று தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 9: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 10: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேர மழை நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): வால்பாறை (கோவை), சின்னக்கல்லார் (கோவை) தலா 5, ராசிபுரம் (நாமக்கல்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 , சீர்காழி (மயிலாடுதுறை) 3, நடுவட்டம் (நீலகிரி) 2 ஆகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில், தென் மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: 'ஆக. 14இல் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.