ETV Bharat / state

நீர்வழித் தடங்களை பாதுகாக்க தலைமைச் செயலகத்தில் ஆலோசனை! - தலைமை செயலகம்

சென்னை: நீர்வழித் தடங்களை பாதுகாக்க குழு அமைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமை செயலகம்
author img

By

Published : May 6, 2019, 12:36 PM IST

நீர்வழித் தடங்களை பாதுகாக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாக்க அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலர் தலைமையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், உள்ளாட்சித் துறை செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய்துறை அதுல்யா மிஸ்ரா, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறை ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வரும் என்று கடந்த மே மாதம் 2ஆம் தேதி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்தே தலைமைச் செயலர் அவசரக் கூட்டத்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வழி தடங்களை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில் குழு அமைப்பது நீர் நிலைகள் நீர் வழித்தடங்களை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தலைமைச்செயலாளர் தலைமையில் அதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் பொதுப்பணிப் துறை செயலர் பிரபாகர், உள்ளாட்சித்துறை செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய் துறை அதுல்யா மிஸ்ரா, சென்னை குடிநீர் வாரியமேலாண் இயக்குனர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

கடந்த மே மாதம் 2 ம் தேதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறை ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வரும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

 இதையடுத்தே தலைமைச்செயலாளர் அவசர கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்திற்கு பின்பு தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.