ETV Bharat / state

'தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்' - அமைச்சர் அறிவித்த திட்டம் கூறுவது என்ன? - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே.அன்பரசன்

'தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்' என்ற புதிய திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே. அன்பரசன் பேரவையில் அறிவித்தார்.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Apr 20, 2022, 9:34 PM IST

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஏப். 20) சட்டப்பேரவையில் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தா.மே.அன்பரசன் பதிலுரை வழங்கி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் படி, Covid-19 பெருந்தோற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயனடையும் வகையில் 'தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்' என்ற புதிய திட்டம் ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க மனநிலை விதைத்திடும் வகையில் 1560 பள்ளிகளில் 1.5 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கடாம் புலியூரில் சுமார் 29 ஏக்கரில் ரூ.13 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், லிங்கம் பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூபாய் 25 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் 11.41 ஏக்கரில் ரூபாய் 4.70 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூபாய் 3.50 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

அதே போல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு இந்த ஆண்டு முதல் மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்படும்.

2022-23 ஆம் நிதி ஆண்டிலிருந்து 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு (Startups) முடுக்க உதவியுடன் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை எளிதாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் பங்குபெற அனுமதிக்கப்படும்.

வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி மற்றும் ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கான வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும்.

வேதிப் பொருள் கலப்படம் இல்லாத ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு பெறுவதற்கு ஏதுவாக ரூபாய் 4 கோடி செலவில் சேகோசர்வ் ஆய்வகம் மேம்படுத்தப்படும், உள்ளிட்ட 27 புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மே.அன்பரசன் பேரவையில் வெளியிட்டார்.

இதையும் படிங்க: 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தந்த அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.