ETV Bharat / state

தாய்மார்கள் தாங்கள் விரும்புகிற நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிருங்கள் - மா.சுப்பிரமணியன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தாய்மார்கள் தாங்கள் விரும்புகிற நாள், நேரத்தில் குழந்தைப் பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென என உங்களுடைய சகோதரனாக கேட்டுக் கொள்கிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் அறிவுரை
மா.சுப்பிரமணியன் அறிவுரை
author img

By

Published : Sep 23, 2021, 4:59 PM IST

சென்னை: தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சைதாப்பேட்டையில் நேற்று(செப்.22) நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசு பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. திருமண நிதியுதவி 25 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை முதலமைச்சர் இலக்காக கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக செயல்படுகிறது.

கர்ப்பிணிகள் சிலர் தாங்கள் விரும்புகிற நாள், நேரத்தில் குழந்தைப் பிறப்பதற்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென உங்களுடைய சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன்.

கருவில் குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகு சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘மண்ணையும் மக்களையும் காப்பதில் சளைக்காத ஆட்சி திமுக’ - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.