வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.