ETV Bharat / state

16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் - ஈடிவி பாரத் செய்திகள்

LiveUpdates: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்

author img

By

Published : Jun 21, 2021, 9:57 AM IST

Updated : Jun 21, 2021, 11:14 PM IST

13:26 June 21

வரும் 3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை தமிழில் வாசித்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 24ஆம் தேதி வியாழன் வரை 3 நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை மறுநாள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:39 June 21

சுய உதவிக்குழுக்களில் பொருளாதார செயல்பாடுகளை உயர்த்த வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு

  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்துயிர் அழைக்கப்படும். சுய உதவிக் குழுக்களில் பொருளாதார செயல்பாடுகளை உயர்த்துவதற்காக அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் வழிவகைகள் வலுப்படுத்தப்படும்
  • இணைய வழி வணிகம் உள்பட மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளையும் இந்த அரசு செய்யும்
  • வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் பொருட்டு பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம்தோறும் நிறுவப்படும்
  • ஊரக வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, சாலை வசதி, நீர்நிலைகளை மறுசெறிவூட்டல் போன்றப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவது இந்த அரசின் தலையாய முன்னுரிமையாக இருக்கும்
  • கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்தவுடன் தற்போது நடைபெறாத பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
  • நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும்
  • இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள நீர் வளங்கள் மீட்கப்படும்; பாதுகாக்கப்படும்

11:18 June 21

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை

  • தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்;
  • இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளப்படும்;
  • தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்;
  • சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திட இந்த அரசு எப்போதும் பாடுபடும்;
  • 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்;
  •  தற்போது உள்ள வருமான வரம்பு 8 லட்சம் ரூபாயை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்;
  • உரிய நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக வக்பு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்;
  • அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள், சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்;
  • மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016இல் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். அவர்களுக்கான பராமரிப்பு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் அவற்றின் பயன்கள் சரியாக சென்றடைவதை உறுதி செய்ய அதிக இடங்களில் களப்பணி ஆற்றிடும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும்;
  • திருநங்கைகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்

11:16 June 21

பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும் - ஆளுநர்

  • தமிழ்நாட்டின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக் கொணரும் வகையில் ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும்; பழமையான கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
  • தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சட்டம் நம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.
  • அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் கோயில்களில் பராமரிப்பைச் செயல்படுத்துவதற்கும் சில ஆலோசனைகளை வழங்குவதற்கு மாநில அளவிலான ஒரு உயர் மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்

11:13 June 21

போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை

  • நெடுஞ்சாலை கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும்.
  • அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரவாயல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் திட்டத்தில் 50 விழுக்காடு செலவு பகிர்வு என்ற அடிப்படையில் மத்திய அரசு தன்னுடைய பங்கு மூலதனத்திற்கான ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்
  • மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருதிரள் விரைவுப் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்: ஆளுநர்

11:10 June 21

சிங்காரச் சென்னை 2.0 என்னும் புதிய திட்டம்

  • மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடிகளை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்
  • சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தைத் தயாரிக்கும் உரிய காலமான 2026ஆம் ஆண்டிற்கு முன்னரே பணிகள் முடிக்கப்படும்
  • சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்தி விடும் வகையில் 'சிங்காரச் சென்னை 2.0' என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

11:08 June 21

மதுரையில் ரூ.70 கோடி செலவில் சர்வதேச தரத்தில் பொது நூலகம்

  • 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும்
  • ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரால் கொண்டுவரப்பட்ட செயல்திறன் குறியீட்டின் தரவரிசைப் பட்டியலில் கற்றல் வழிபாடு மற்றும் தரத்தில் தமிழ்நாடு அரசு பின்தங்கிவிட்டது. இதில் அதிக கவனம் செலுத்தி முதல் இடத்தைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். - ஆளுநர்

11:06 June 21

குடும்ப அட்டைகோரினால் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு

ஆவின் விலை தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனை ஏறத்தாழ 1.5 லட்சம் லிட்டர் அளவு உயர்ந்துள்ளது. 

குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: ஆளுநர்

11:03 June 21

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம்

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர்களின் சமூக நலன்களை இந்த அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் உயிரிழப்பு ஏற்படுவதும் போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

மேலும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக மீனவர்கள் நலனுக்காக தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அரசிடம் அரசை வலியுறுத்தும்: ஆளுநர்

10:57 June 21

ஆளுநர் உரையைக் கவனித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கலந்து கொண்டு, உரையைக் கவனித்தனர். 

10:55 June 21

தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புவோம் - ஆளுநர்

மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை உள்ளது - ஆளுநர்

10:51 June 21

சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக செயல்படும் - ஆளுநர்

சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு செயல்படும்; மாநில சுயாட்சி இலக்கை எட்ட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர்

10:48 June 21

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை வலியுறுத்துவோம்

ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் - ஆளுநர்

10:48 June 21

அனைவருக்குமான அரசு

தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும்; சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும் - ஆளுநர்

10:47 June 21

எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு உறுதி

பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது - ஆளுநர்

10:43 June 21

நிதிநிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியீடு

தமிழ்நாடு நிதிநிலையின் உண்மையான நிலையை விளக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் - ஆளுநர்

10:43 June 21

வடமாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்

சென்னை - கன்னியாகுமரி தொழில்  பெரு வழியிலும் சென்னை - பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சிக் குறைவாக உள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் - ஆளுநர்

10:43 June 21

சிறு, குறுதொழில்களை மீட்க நிபுணர் குழு அமைப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித் துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும் - ஆளுநர்

10:41 June 21

கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரம்

2021 - 22ஆம் ஆண்டில் 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கை அடைய காவிரி டெல்டா கடைமடைப் பகுதிவரை நீர் சென்றடைய 4,061 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - ஆளுநர்

10:37 June 21

இணையவழி மூலம் அரசு சேவையைப் பெற வழிவகை - ஆளுநர்

மின் ஆளுகையை ஊக்குவித்து இணையவழி மூலம் அரசு சேவைகளை பெறுவதற்கு எங்கும் எப்போதும் பொதுமக்கள் உடனுக்குடன் இணைய வழி வாயிலாகப் பெற வழிவகை செய்யப்படும் - ஆளுநர்

10:35 June 21

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும் - ஆளுநர்

10:32 June 21

புதிய தடுப்பூசி கிடைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு புதிய தடுப்பூசி கிடைக்க உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது - ஆளுநர்

10:30 June 21

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10 ஆயிரத்து 68 கோடி ரூபாய் இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கியுள்ளது.

10:25 June 21

முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அனுமதியை ஒன்றிய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். 

10:22 June 21

3ஆவது அலையைச் சமாளிக்க அரசு உறுதி

கரோனா மூன்றாவது அலையைச் சமாளிக்க இந்த அரசு அனைத்துவித முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் செய்யும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதியளித்தார். 

10:20 June 21

திரவ மருத்துவ ஆக்ஸிஜனுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

திரவ மருத்துவ ஆக்ஸிஜனுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

10:16 June 21

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன் வடிவு: ஆளுநர்

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன் வடிவு கொண்டு வந்து, குடியரசுத்தலைவரை வலியுறுத்துவோம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

10:13 June 21

மீண்டும் உழவர் சந்தைகள்

கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்

10:12 June 21

தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்துவோம்: ஆளுநர்

தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்துவோம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார். 

10:03 June 21

தமிழ் இனிமையான மொழி - ஆளுநர்

தமிழ் இனிமையான மொழி என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையைத் தொடங்கினார்

09:12 June 21

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. 

மரபுப்படி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 10 மணிக்குத் தனது உரையை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் படிக்க இருக்கிறார். 

Last Updated : Jun 21, 2021, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.