தமிழ்நாட்டி கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஏற்கனவே தொற்று இருந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவிவருகிறது. இதனால் அதிக அளவில் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மத்திய அரசு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்தாலும் அதற்கு போதுமான இயந்திரங்கள் ஊரடங்கு உத்தரவால் உடனடியாக பெற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் அங்குள்ள நுண்ணுயிர் துறையில் உள்ள ஆய்வங்களை பரிசோதனைக்காக வழங்கியுள்ளது. இதன்மூலம் அங்குள்ள இயந்திரங்களின் மூலம் வைரஸ் தொற்றினை எளிதில் கண்டறிய முடியும்.
இந்த இயந்திரங்களை மக்கள் நல்வாழ்வு துறையினர் பெற்றுச் சென்று மருத்துவமனைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று உறுதியானால் அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ள முடியும் என உயர்கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...சென்னையில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பு - மேற்பார்வைக் குழு அலுவலர் தகவல்