ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - tn govt identify distribute eggs sanitary napkins

சத்துணவு முட்டை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Aug 4, 2020, 12:29 PM IST

Updated : Aug 4, 2020, 3:12 PM IST

12:22 August 04

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்க தமிழ்நாடு அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக முட்டை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற மாநிலத்தில் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க, அரசு திட்டம் வகுக்கக்கோரி வழக்குரைஞர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், "சத்துணவு கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர். 

இதன் மூலம் கரோனா ஊரடங்கு காலகட்டத்திலும், 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் 23.86 லட்சம் வளரிளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்களுக்கு 71.59 லட்சம் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது" என நீதிபதியிடம் தனது வாதத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 4) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஏற்கனவே சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கு சூழலால் தடைப்பட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம். அதே நேரத்தில் முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா? வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா? உள்ளிட்ட விஷயங்கள், ஏழை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை எப்படி விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்து அரசே முடிவெடுக்கலாம்" எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கடமையைச் செய்த ஈடிவி பாரத் செய்தியாளருக்கு எதிராக 3 வழக்குகள் - செய்தியாளரின் குரல்வளை நெறிக்கப்படுவதாக நீதிமன்றம் கருத்து!

Last Updated : Aug 4, 2020, 3:12 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.