வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்கள் காரணமாகப் புதுப்பிக்கத் தவறிய பதிவு தாரர்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக, சிறப்பு புதுப்பித்தல் சலுகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பதிவு தாரர்கள் மே 28ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் (ஆகஸ்ட் 27க்குள்) ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குப் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தியும், பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!