ETV Bharat / state

குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு - சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீடுகளுக்கே சென்று உரிய மரியாதை

சென்னை: கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு குடியரசு தின விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

TN government denied  the Republic Day celebration due to the pandemic

author img

By

Published : Jan 22, 2021, 11:34 AM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜனவரி 26ஆம் நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

republic day
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.