இது தொடர்பாக தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் பரவுவதைத் தடுக்க, வரும் 4ஆம் தேதி முதல் ஊரடங்கைத் தொடர்ந்து அமல்படுத்த தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, வைரஸ் தடுப்புப்பகுதிகளில் (Containment Zones) எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.
வைரஸ் தொற்றின் அளவு, அதன் தன்மையின் அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல தளர்வுகளை அனுமதித்துள்ளது.
அதன்படி, சிவப்பு மாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
எனவே, வைரஸ் தடுப்புப் பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிற மாவட்டப் பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின்படி, ஏற்கெனவே முதலமைச்சரின் செய்தி வெளியீட்டில் தெரிவித்தபடி, அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை.
எனவே, இந்த தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி, அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நோய்க்கட்டுபாட்டுப் பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஊதியம் கொடுத்த சான்றிதழ்களை தனியார் கல்லூரி சமர்ப்பிக்க முதலமைச்சருக்கு மனு