ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தல்: தமிழ்நாட்டில் 13.8 சதவீத வாக்குகள் பதிவு!

author img

By

Published : Apr 6, 2021, 6:11 AM IST

Updated : Apr 6, 2021, 5:15 PM IST

தமிழ்நாடு வாக்குப்பதிவு 2021
தமிழ்நாடு வாக்குப்பதிவு 2021

09:36 April 06

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு 13.8 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் 20.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 10.58 சதவீதமும், திருவள்ளூரில் 12.8 சதவீதமும், காஞ்சிபுரம் 14.40 சதவீதமும், வேலூர் 12.74 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

09:16 April 06

ஜனநாயகத் திருவிழா: தளபதியின் ஒற்றைவிரல் புரட்சி!

நடிகர் விஜய் தனது ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற நீலங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வருகைதந்தார்.

பின்னர் வாக்குச்சாவடியில் ஒற்றை விரல் புரட்சியின் மூலம் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

09:12 April 06

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வருகை

நடிகர் விஜய் தனது வாக்கைப் பதிவுசெய்ய வாக்குப்பதிவு மையத்திற்கு வீட்டிலிருந்து சைக்கிளில் வருகைதந்தார்.

09:07 April 06

பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி வாக்களிப்பு

காமராஜர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

09:02 April 06

அமைச்சர் ஜெயக்குமார் வாக்களிப்பு

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

09:00 April 06

'அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துங்கள்!'

அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் எனப் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

08:58 April 06

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கை கர்தினால் லூர்துசாமி அரசினர் பெண்கள் பள்ளியில் பதிவுசெய்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் நாராயணசாமி பேசுகையில், "மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாக்கும் நோக்கில் உள்ள பாஜக கூட்டணியை புதுச்சேரி மக்கள் புறக்கணித்து காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்வர்" என்றார்.

08:55 April 06

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்களிப்பு

காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்களித்தார்.

08:48 April 06

அமைச்சர் செல்லூர் ராஜு வாக்களிப்பு

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் வாக்களித்தார்.

08:43 April 06

சிவகார்த்திகேயன் வாக்களிப்பு

வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

08:41 April 06

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

ஆதம்பாக்கம் ஜி.கே. ஷெட்டி பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.

அதேபோல், திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

08:39 April 06

ஜனநாயகத் திருவிழா: ஓபிஎஸ் வாக்களிப்பு

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

08:36 April 06

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாக்களிக்க வருகை

தனது ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றும் வண்ணம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வருகைபுரிந்துள்ளார்.

08:35 April 06

ஜனநாயகத் திருவிழா: சத்யபிரத சாகு வாக்களிப்பு

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு வளசரவாக்கத்தில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

08:26 April 06

வளசரவாக்கத்தில் சீமான் வாக்களிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தி ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார்.

08:24 April 06

ஜனநாயகக் கடைமையாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

08:18 April 06

என். ரங்கசாமி வாக்குப்பதிவு

புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

08:18 April 06

எல். முருகன் வாக்களிப்பு

பாஜக தமிழ்நாடு தலைவர் முருகன் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

08:13 April 06

விராலிமலையில் விஜயபாஸ்கர் வாக்களிப்பு

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

08:10 April 06

வாக்களித்தார் ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கைப் பதிவுசெய்தார். அவரது குடும்பத்தினரும் தங்களது ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

08:09 April 06

பிரேமலதா விஜயகாந்த் வாக்களிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களித்து தனது ஜனநாயக உரிமையை நிலைநாட்டினார்.

07:59 April 06

செந்தில் பாலாஜி வாக்களித்தார்

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் வாக்களித்தார்.

07:56 April 06

ஜனநாயகக் கடமையாற்ற ஸ்டாலின் வருகை

ஜனநாயகக் கடமையாற்ற ஸ்டாலின் வருகை
ஜனநாயகக் கடமையாற்ற ஸ்டாலின் வருகை

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களிக்க வருகைதந்தார். 

மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோருடன் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வந்தார்.

07:55 April 06

ப. சிதம்பரம் வாக்குப்பதிவு

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் காரைக்குடி கண்டனூரில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

07:48 April 06

அமைச்சர் செங்கோட்டையன் வாக்களிப்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தனது வாக்கைச் செலுத்தினார்.

07:45 April 06

ராமதாஸ் வாக்களிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ஜனநாயகக் கடைமையை நிறைவுசெய்தார்.

07:35 April 06

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தார். 

07:23 April 06

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வாக்களித்தார்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வாக்களிக்க வருகை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்கு மையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அவரது மகள்கள் சுருதி ஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோர் வாக்களித்தனர்.

07:11 April 06

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்
நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

07:08 April 06

நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களிக்க வருகை

சென்னை தி.நகரில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களிக்க வருகை தந்துள்ளனர். 

07:00 April 06

நடிகர் அஜித்குமார் வாக்கு செலுத்தினார்

நடிகர் அஜித்குமாரும், அவரது மனைவி ஷாலினியும், திருவான்மியூரில் உள்ள குப்பம் கடல்கரை வாக்குப்பதிவு மையத்தில் வாக்குசெலுத்தினர்.

06:58 April 06

வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. 

06:43 April 06

நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை

நடிகர் அஜித்குமாரும், அவரது மனைவி ஷாலினியும், திருவான்மியூரில் உள்ள குப்பம் கடல்கரை வாக்குப்பதிவு மையத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே ஓட்டுப்பதிவுக்காக வருகை தந்துள்ளனர். 

06:41 April 06

மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக நடைபெறும் வாக்குப்பதிவு தொடங்கியது.

22:57 April 05

சட்டப்பேரவை தேர்தல்: தமிழ்நாட்டில் 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். 

அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்களும், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112  பெண்களும், 7,192 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 6, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.