தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 259 ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்களின் மூலம் 80 ஆயிரத்து 253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,271 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த 5 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என 2,279 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து ஐந்தாயிரத்து 807 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் எட்டு லட்சத்து 81 ஆயிரத்து 752 பேர் கரோனா தீநுண்மி தொற்றுக்கு உள்ளானார்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 13 ஆயிரத்து 983 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 29) 1,352 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 55 ஆயிரத்து 85 என உயர்ந்துள்ளது.
அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஏழு பேர், தனியார் மருத்துவமனையில் ஏழு பேர் என மொத்தம் 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக 815 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 148 பேர் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
சென்னை - 2,47,148
கோயம்புத்தூர் - 58,471
செங்கல்பட்டு - 55,796
திருவள்ளூர் - 45,843
சேலம் - 33,397
காஞ்சிபுரம் - 30,420
கடலூர் - 25,618
மதுரை - 21,729
வேலூர் - 21,419
திருவண்ணாமலை - 19,661
திருப்பூர் - 19,216
தஞ்சாவூர் - 19,518
தேனி - 17,280
கன்னியாகுமரி - 17,453
விருதுநகர் - 16,844
தூத்துக்குடி - 16,530
ராணிப்பேட்டை - 16,444
திருநெல்வேலி - 16,024
விழுப்புரம் - 15,471
திருச்சிராப்பள்ளி - 15,511
ஈரோடு - 15,291
புதுக்கோட்டை - 11,838
நாமக்கல் - 12,075
திண்டுக்கல் - 11,833
திருவாரூர் - 11,914
கள்ளக்குறிச்சி - 10,943
தென்காசி - 8,690
நாகப்பட்டினம் - 9,061
நீலகிரி - 8,635
கிருஷ்ணகிரி - 8,421
திருப்பத்தூர் - 7,789
சிவகங்கை - 6,962
ராமநாதபுரம் - 6,543
தர்மபுரி - 6,767
கரூர் - 5,629
அரியலூர் - 4,812
பெரம்பலூர் - 2,305
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 972
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,051
ரயில் மூலம் வந்தவர்கள் - 428