மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (அக்டோபர் 16) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டிலுள்ள 192 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து நான்காயிரத்து 389 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 87 லட்சத்து 66 ஆயிரத்து 38 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு லட்சத்து 79 ஆயிரத்து 191 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் என 40 ஆயிரத்து 959 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் ஐந்தாயிரத்து 245 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு இன்று திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 27 ஆயிரத்து 703ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி ஒரேநாளில் 57 நபர்கள் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு குணமடைந்தவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்ததுவருகிறது.
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,140
செங்கல்பட்டு - 261
திருவள்ளூர் - 195
மதுரை - 84
காஞ்சிபுரம் - 130
விருதுநகர் - 38
தூத்துக்குடி - 56
திருவண்ணாமலை - 64
வேலூர் - 118
திருநெல்வேலி - 61
தேனி - 39
ராணிப்பேட்டை - 58
கன்னியாகுமரி - 70
கோயம்புத்தூர் - 387
திருச்சிராப்பள்ளி - 80
கள்ளக்குறிச்சி - 46
விழுப்புரம் - 85
சேலம் - 244
ராமநாதபுரம் - 15
கடலூர் - 116
திண்டுக்கல் - 33
தஞ்சாவூர் - 98
சிவகங்கை - 19
தென்காசி - 13
புதுக்கோட்டை - 39
திருவாரூர் - 76
திருப்பத்தூர் - 62
அரியலூர் - 16
கிருஷ்ணகிரி - 63
திருப்பூர் - 147
தருமபுரி - 68
நீலகிரி - 93
ஈரோடு - 133
நாகப்பட்டினம் - 64
நாமக்கல் - 132
கரூர் - 34
பெரம்பலூர் - 7
இதையும் படிங்க: பயணிகள் குறைவு...மந்த நிலையில் தனியார் பேருந்து சேவை!