மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 149 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், தமிழ்நாட்டிலிருந்து 1901 நபர்களுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என 1904 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு
இதுவரை மூன்று கோடியே 49 லட்சத்து 62 ஆயிரத்து 323 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 25 லட்சத்து 39 ஆயிரத்து 277 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 27 ஆயிரத்து 717 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 2,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 78 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் எட்டு பேரும், அரசு மருத்துவமனையில் 22 பேரும் என 30 நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,36,493
- கோயம்புத்தூர் - 2,27,283
- செங்கல்பட்டு - 1,60,762
- திருவள்ளூர் - 1,12,686
- சேலம் - 92,277
- திருப்பூர் - 86,818
- ஈரோடு - 92,189
- மதுரை - 73,252
- காஞ்சிபுரம் - 71,247
- திருச்சிராப்பள்ளி - 71,676
- தஞ்சாவூர் - 66,814
- கன்னியாகுமரி - 59,769
- கடலூர் - 59,676
- தூத்துக்குடி - 54,885
- திருநெல்வேலி - 47,589
- திருவண்ணாமலை - 51,428
- வேலூர் - 47,716
- விருதுநகர் - 45,312
- தேனி - 42,795
- விழுப்புரம் - 43,442
- நாமக்கல் - 46,587
- ராணிப்பேட்டை - 41,705
- கிருஷ்ணகிரி - 41,024
- திருவாரூர் - 37,508
- திண்டுக்கல் - 31,997
- புதுக்கோட்டை - 27,825
- திருப்பத்தூர் - 27,991
- தென்காசி - 26,697
- நீலகிரி -29,961
- கள்ளக்குறிச்சி - 28,591
- தருமபுரி - 25,742
- கரூர் - 22,496
- மயிலாடுதுறை - 20,733
- ராமநாதபுரம் - 19,920
- நாகப்பட்டினம் - 18,387
- சிவகங்கை - 18,543
- அரியலூர் -15,552
- பெரம்பலூர் - 11,398
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,008
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
- ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க: ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு