கரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைமைக்குத் திரும்பிய நிலையில், ஓமைக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. நாட்டில் மொத்தம் 578 பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 34 பேருக்கு உறுதியாகியுள்ளது.
இதனால் டெல்லி, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடத்தவுள்ளார்.
இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர் குழு ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கூட்டத்திற்குப் பின் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Night Curfew: தமிழ்நாட்டிற்கு இரவு நேர ஊரடங்கு அவசியமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் புதுத்தகவல்