சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது தற்போது பரவி வரும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறித்தும்; கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார்.
அப்போது, ஆளுநர் தனது விருப்பப்படி, பேரிடர் மானியத்திலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி பங்களிப்பு செய்தார்.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டீல் ஆகியோர் உடன் இருந்தனர்.