தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும்விதமாக, "புதிய தொழில் கொள்கை", புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை (பிப். 16) காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.
இதுமட்டுமின்றி, ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார். இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக, 4 சிப்காட் , 6 டிட்கோ தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையும் படிங்க: ஜெ. பிறந்த நாளான பிப்.24இல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!