இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள், நேற்றிரவு (ஏப்ரல்.07) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனை அடைந்துள்ளேன்.
ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புகள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த வள்ளியம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.