ETV Bharat / state

ஓசூரை மிகப்பெரிய தொழில்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்கத் திட்டம் - அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!

சென்னை: ஓசூர் நகரத்தை இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் திட்டம் என, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.சி.சம்பத்
அமைச்சர் எம்.சி.சம்பத்
author img

By

Published : Mar 13, 2020, 12:31 PM IST

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, "ஓசூர் தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா" என்று ஓசூர் உறுப்பினர் சத்யா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,"ஓசூர் நகரத்தை பொறுத்தவரை சிப்காட் - 2 செயல்பட்டு வருவதாகவும், அதில் 347 நிறுவனங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு 30 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் 5 புதிய நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டில் (2019) நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின்பு புதியதாக பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம், 635 கோடி ரூபாய் மதிப்பில் ஓசூரில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

இதன் மூலம் 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி சிப்காட் - 3 உருவாக்க சூளகிரியில் 905 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும், GMRஇல் முதன் முறையாக 279 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு முதலீட்டு மண்டலம் கொண்டு வரப்படவுள்ளது.

ஓசூரைச் சென்னைக்கு அடுத்து இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி பெறும் நகரமாக உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் திட்டம்" என்று அமைச்சர் எம்.சி.சம்பத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்பிஆர் விவகாரம் - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.