மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு இன்று பகல் 2 மணிக்கு வந்த ஓமன் ஏா்லைன்ஸ் பயணிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதணையில், தமிழகத்தை சோ்ந்த 3 போ், கா்நாடகா 1,புதுச்சேரி 1 மொத்தம் 5 பேருக்கு காய்ச்சல்,சளி,சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவா்களை வெளியே அனுப்பாமல் தனி அறையில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டனர்.
பின்பு மாலை 5 மணிக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். இவா்கள் 5 பேரும் இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மன் நாடுகளில் தனியாா் நிறுவனங்களில் பணியிலிருந்த நபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இன்று ஒரே நாளில் இதுவரை 5 பெண்கள் உட்பட 14 போ் மருத்துவ பரிசோதணையில் கரோனாவுக்கான சந்தேக அறிகுறியுடன் மருத்துவ முகாமிற்கு அனுப்பப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் கரோனா வைரஸ் குறித்து மருத்துவ முகாம்