ETV Bharat / state

மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை - வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்

சென்னையில், பட்டப்பகலில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 83ஆயிரம் பணம் மற்றும் 40 சவரன் நகை கொள்ளை. போலீசுக்கு செல்லக்கூடாது என நிர்வாணப்படுத்தி மூதாட்டியை புகைப்படம் எடுத்து சென்ற கொள்ளையர்கள்.

Etv Bharat
அரும்பாக்கத்தில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் திருட்டு
author img

By

Published : Mar 21, 2023, 4:33 PM IST

Updated : Mar 21, 2023, 4:38 PM IST

சென்னை: சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி. காலமான ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியான. இவர் வீட்டில் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று, மூதாட்டியின் மகன் மற்றும் அவரது மனைவி பணிக்கு சென்ற போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கதவைத் தட்டி வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது நாங்களே வாடகைக்கு தான் குடியிருக்கிறோம் என்று மூதாட்டி கூற, உடனடியாக அவர்கள் கதவை எட்டி உதைத்து வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மூதாட்டியின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியின் கழுத்து மற்றும் கையில் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த பீரோ மற்றும் லாக்கரை உடைத்து 40சவரன் நகை மற்றும் 83ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தைப் பற்றி போலீஸிடம் கூறினால் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் எனவும், வீட்டிலிருக்கும் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் எனவும் மூதாட்டியை மிரட்டியுள்ளனர்.

மிரட்டியதோடு மட்டுமில்லாமல் மூதாட்டியின் கையை வெட்டி, காயத்தை ஏற்படுத்திவிட்டு அந்த கும்பல் பணம் மற்றும் நகையுடன் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து மூதாட்டியின் மகன் வீட்டிற்கு வந்தப்பின் அவரை மீட்டு உடனடியாக இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

புகார் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழில் போட்டியின் காரணமாக அவரது மகனுக்கு வேண்டாதவர்கள் யாரும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வீட்டினுள் புகுந்து கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளதாக அரும்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேமரா, ரகசிய குறியீடுகளுடன் புறாக்கள் மீட்பு - உளவு பார்க்கப்பட்டதா?

Last Updated : Mar 21, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.