சென்னை சேலவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சோகன்லால் (32). இவர் கடந்த 21ஆம் தேதி எழும்பூரில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் ஜோத்பூர் விரைவு ரயிலில் பயணம் செய்தார். அப்போது, ரயிலில் பயணம் செய்த மூன்று திருநங்கைகள் சோகன்லாலிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சோகன்லால் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளை வலைவீசித் தேடிவந்தனர். இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த மூன்று திருநங்கைகளை ரயில்வே காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
அதன்பின், சோகன்லாலிடமிருந்து கொள்ளையடித்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றபட்டது. மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது!