சென்னை மாவட்டம், சாஸ்திரி நகர் அருகே ஓடைக்குப்பம் பகுதியில் போதை தரக்கூடிய மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அடையாறு துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் அப்பகுதியில் போதை தரும் சுண்டக்கஞ்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுண்டக்கஞ்சி விற்பனை செய்த அஜித், செல்வம், மகேந்திரன் ஆகிய மூவரைத் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், மூவரும் பழைய சோற்றுடன் போதை மருந்துகளைக் கலந்து பானைகளில் போட்டு தரையில் புதைத்து மூன்று நாட்கள் கழித்துச் சுண்டக்கஞ்சியாக எடுத்து விற்பனை செய்ததாகக் கூறினர்.
இதனை அடுத்து அவர்கள் மீது சாஸ்திரி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.