ETV Bharat / state

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடிர் தீ விபத்து - 3 பேர் மருத்துவமனையில் அனுமதி - தீ விபத்து

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடிர் தீ விபத்து- 3 பேருக்கு மூச்சு திணறல்!

author img

By

Published : Feb 18, 2023, 7:04 PM IST

சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் 12 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 134 வீடுகள் அமைந்துள்ளது. நேற்றிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12ஆவது மாடியில் உள்ள மின்மாற்றியில் திடீரென தீ ஏற்பட்டு அதிகளவிலான புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைத்து குடியிருப்பு வாசிகளும் வெளியே தீப்பற்றி எரிவதாக நினைத்து, அவர்களது பால்கனியில் நின்று கொண்டு செல்போன் டார்ச் லைட்டை ஆன் செய்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள் என கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த மக்கள் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் பேரில், கீழ்ப்பாக்கம், கிண்டி, விருகம்பாக்கம், அசோக் நகர் ஆகிய நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புகை மூட்டத்தில் சிக்கிய நபர்களை மீட்க 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதனையடுத்து, புகை மூட்டத்தில் சிக்கிய அனைவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டு கீழே இறக்கினர். மேலும், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய ராஜாமோகன், நீலா, சஞ்சனா சாகார், ஆகிய மூவரை தீயணைப்பு துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 1 மணி நேரமாக போராடி மின்மாற்றியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை. பின்னர் இந்த தீ விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் நூதன மோசடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.