வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.1) கோட்ட வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேச உள்ளோம்.
ஜல் சக்தித் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி போதுமானதாக இல்லை.
எனவே, கூடுதல் நிதி கேட்க உள்ளோம். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இதுவரை மொத்தம் ஆறு தடுப்பு அணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில், இதனை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக இந்தத் தடுப்பணைகள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் கட்டப்படும்" என்றார்.
இதையும் படிங்க: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம்? அமைச்சர் துரைமுருகன் பதில்