சென்னையில் ஆர்கே நகரில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தண்டையார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிறப்புக் குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல்செய்து மூவரையும் கைதுசெய்தனர்.
தொடர்ந்து விசாரணையில், துர்கா தேவி நகரைச் சேர்ந்த அன்சார் பாஷா (23), சுமித் குமார் (22), பாலாஜி (20) என்பது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா விநியோகம் செய்யும் நாட்டாமை பிரபு (எ) சிவதாஸை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 150 கிலோ கஞ்சா கடத்தல்; இருவர் கைது!