சென்னை: துபாய் ஷேக் முகமது பின் ராஸிக் நூலகத்திற்கு 1000 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அன்பில் மகேஷ் பொய்யமாெழி வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக துபாய் சென்றுள்ளனர். அங்கு குழந்தைகள் தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், துபாய் ஷேக் முகமது பின் ராஸிக் நூலகத்திற்கு வழங்கிய 1000 நூல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான மாணவர்கள் குழு நூலக நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
மேலும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான இன்று குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தாண்டு சிறப்பு கவனம் தேவைப்படும் பள்ளிக்குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருந்தார்.
மேலும் பள்ளிகளில் உறுதிமாெழி ஏற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமையிலான மாணவர்கள் குழு துபாய் ஷேக் முகமது பின் ராஸிக் நூலகத்தில் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: 333 பேருக்கு 'முன் வேலைவாய்ப்பு' சென்னை ஐஐடி அசத்தல்!