ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (அக்.20) பதவி ஏற்கவுள்ளனர் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

those-who-won-local-body-elections-take-oath

author img

By

Published : Oct 20, 2021, 9:00 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர் என 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மேலும், 28 மாவட்டத்திற்கு காலியாக இருந்த 789 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது.

திமுக கூட்டணி

இதில் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (அக்.20) பதவி ஏற்றுக்கொள்வார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் 22ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதவி ஏற்பார்கள்.

வாக்களிக்கும் உரிமை

மேலும், இன்று பதவியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மறைமுக தேர்தல் நடைபெறும்போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்குத் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் கிடைக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பம்பு செட் விவசாயிகள் பாதிப்பு.. டீசல் விலையை குறைத்திடுக.. மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.