ETV Bharat / state

'பாலை அதிக விலைக்கு விற்பவர்கள் பிணத்தை வைத்து வியாபாரம் செய்வதற்குச் சமம்' - Ponnusamy

பால் முகவர்கள் கடைகளில் மட்டுமே பால் தங்கு தடையின்றி கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே காலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ponnusamy
Ponnusamy
author img

By

Published : Mar 26, 2020, 12:22 PM IST

Updated : Mar 26, 2020, 3:25 PM IST

சென்னை: பாலை அதிக விலைக்கு விற்பவர்கள் பிணத்தை வைத்து வியாபாரம் செய்வதற்குச் சமம் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனரும் தலைவருமான ஆ. பொன்னுசாமி கடுமையாக விமர்சனம்செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது:

144 தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதிலும் நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை விற்பனைசெய்யும் பால் கடைகள் மளிகைக் கடைகள் உணவுக் கடைகளை மூடுமாறு காவல் துறையினர் வற்புறுத்துகின்றனர்.

எங்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் அனைத்தும் உள்ளன, எங்களுக்கும் நோய் தொற்று உண்டாகும். இவற்றை எல்லாம் கடந்து நாங்கள் கடைகளைத் திறந்துவைப்பது சேவை நோக்கில் மட்டுமே . பால் முகவர்கள் கடைகளில் மட்டுமே பால் தங்கு தடையின்றி கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே காலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் கிடைக்கும்.

தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போது நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி மொத்தமாகப் பால் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவலும் எங்களுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி பாலை அதிக விலைக்கு விற்பனைசெய்பவர்கள் பிணத்தை வைத்து வியாபாரம் செய்வதற்குச் சமம்.

பால் விலை அதிகமாக விற்பனைசெய்பவர்கள் குறித்து எங்கள் சங்கத்தில் தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். அல்லது இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம்.

காலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் கிடைக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated : Mar 26, 2020, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.