ETV Bharat / state

தூத்துக்குடி கொலை வழக்கு: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருமணவேல்! - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருமணவேல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேல் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudi-murder-case-reflection-thirumanavel-removed-form-the-admk-party

author img

By

Published : Sep 21, 2020, 7:12 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேல் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' அதிமுகவின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த A. திருமணவேல், (தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட செல்வன் வழக்கில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இவர் சென்னை நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகளை செய்து தர அரசு மறுக்கிறது: திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.