ETV Bharat / state

'கருணாநிதியிடமிருந்து சமூகநீதியைக் கற்றுக்கொள்ளுங்கள்' - திருமாவளவன்

சென்னை: கருணாநிதியிடமிருந்து சமத்துவ சிந்தனையையும், சமூகநீதி சிந்தனையையும் உள்வாங்கிக்கொள்வதுதான் இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan
author img

By

Published : Jun 3, 2020, 6:01 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கருணாநிதியின் செயல் திட்டங்களிலேயே மகத்தான ஒன்று சமத்துவபுரம். இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சர்களும் சிந்திக்காத புரட்சிகரமான திட்டம் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டமாகும். எல்லா தரப்பு மக்களும் ஒரே இடத்தில் வாழவேண்டும் என்ற ஒரு கனவு. அதை நினைவாக்கக் கூடிய திட்டம்தான் சமத்துவபுரம் என்கிற சமூகநீதித் திட்டம்.

இந்தியா முழுவதும் இரட்டை வாழிடங்கள், இரட்டைச் சுடுகாடுகள், இரட்டைத் தேநீர்க் குவளைகள் ஆகிய பாகுபாடுகள் இருக்கின்ற சூழலில் ஒரே வாழ்விடத்தை உருவாக்க வேண்டும் என்ற சமத்துவ சிந்தனை போற்றுதலுக்குரியது, புரட்சிகரமானது. கருணாநிதியிடமிருந்து இத்தகைய சமத்துவ சிந்தனையையும், சமூகநீதி சிந்தனையையும் உள்வாங்கிக் கொள்வதுதான் இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் என்று நான் கருதுகிறேன்; நம்புகிறேன்.

திருமாவளவன் வாழ்த்து
திருமாவளவன் வாழ்த்து

அரசியலில் சாதிக்க துடிக்க விரும்புகிறவர்கள், கருணாநிதியிடமிருந்து சமூகநீதி, சமத்துவம் என்கிற கோட்பாடுகளையும் போர்க்குணம், சகிப்புத்தன்மை என்ற பண்புக் கூறுகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.