ETV Bharat / state

நீங்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றவர்களா? - இது உங்கள் கவனத்திற்கு! - are you going to your native place from chennai?

சென்னை: சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற அனைவரும் எவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது குறித்த தொகுப்பு...

this-is-for-your-attention-how-to-self-quarantine-at-home

author img

By

Published : Mar 24, 2020, 11:08 PM IST

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் எதிரொலியாக நேற்று சென்னையில் தங்கியிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குப் படையெடுத்தனர்.

குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயங்கும் என்று கூறியதாலும் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் ஏறினர். இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியாக நுழைந்து பேருந்துக்குள் நுழைந்து இடம்பிடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மக்களிடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டன.

எது எப்படியாகினும் பெரும்பாலான மக்கள் பல்வேறு இடர்களைத் தாண்டி ஊருக்குச் சென்றுவிட்டனர். அவ்வாறு சென்ற மக்களுக்கு அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அவை பின்வருமாறு:

  • பொதுமக்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்பவர்கள் தயவுசெய்து அந்தந்த ஊராட்சிகளில் தகவல் தெரிவிப்பதுடன், அங்குள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிறுவனஙகள் அல்லது அரசு மருத்துவமனைகளில் நீங்களாகச் சென்று பரிசோதனை செய்து கொள்வதுடன், உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதனை கரோனாவுக்கு எதிரான உங்களது பங்களிப்பாகக் கருதி ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவுங்கள்.
  • நேரில் வர இயலாதவர்கள் உங்களிடம் உள்ள ஊராட்சிப் பிரதிநிதிகள் (தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள்) ஒருவரது கைபேசி எண்ணிற்காவது தகவல் கொடுத்து உதவுங்கள். இது அனைத்து ஊராட்சிகளுக்கும் பொருந்தும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் (Home quarantine) என்றால் என்னவென்று முதலில் புரிந்து செயல்படுங்கள்
  • சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் ஊர் திரும்பியவர்கள் தயவுசெய்து 14 நாள்களுக்கு குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்
  • உங்கள் உடமைகளைக் கொண்டுபோய் நடுவீட்டில் போட்டுவிட்டு பயணக் களைப்பில் சேரிலும் படுக்கையிலும் சாயாதீர்கள்
  • வீட்டிற்குள் நுழையும் முன்பு உடமைகளை வெளியே வையுங்கள். அதை உங்கள் குடும்பத்தாரைத் தொட வைக்காதீர்கள். நீங்களே ஹேண்டில் செய்யுங்கள். கைகளை சோப் அல்லது சானிடைசர் போட்டுக் கழுவி விட்டு, அதன் பின் உடனே குளித்து, போட்டு வந்த துணியைத் துவைத்து நீங்களே தனியே காய வைத்துச் செல்லுங்கள். அதை உங்கள் குடும்பத்தினரை செய்ய வைத்து, உங்கள் குடும்பத்தினர் துணிகளுடன் கலந்து நோய்த் தொற்றைப் பரப்பாதீர்கள்
  • வீட்டில் எல்லா இடத்திலும் புழங்காமல் தயவுசெய்து ஒரு தனி அறைக்குள் மட்டுமே இருங்கள். தண்ணி குடிக்கக் கூட வீட்டின் பிற அறைகளுக்கோ, நடுக்கூடத்திற்கோ செல்ல வேண்டாம்
  • பாத்ரூம் மற்றும் பிற கதவுகளைக் கூட முழங்கைகளால் திறந்து உபயோகியுங்கள்
  • சுவிட்சுகள், டிவி ரிமோட் எதையும் தொடாதீர்கள். முக்கியமாக உங்கள் செல்போன் நிறைய கிருமிகளைக் கொண்டிருக்கும். தயவுசெய்து வீட்டினர், குழந்தைகள் கையில் கொடுக்காதீர்கள்
  • சொந்தங்கள் வீடு, தாத்தா வீடு, பக்கத்து வீடு எங்கேயும் செல்லாதீர்கள்
  • இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கை கழுவுங்கள். வீட்டில் எதையும் தொடாதீர்கள். முடிந்த வரை உங்களுடைய கண், மூக்கு, வாயைத் தொடாதீர்கள். * குழந்தைகள் பெரியவர்களை யாரையும் தொடாதீர்கள்.
  • பால் பாக்கேட், பிஸ்கட் பாக்கேட் என வெளியிலிருந்து எதை வாங்கி வந்தால் கூட அதைக் கழுவுங்கள். அதைத் தொட்டதும் உங்கள் கைகளையும் கழுவுங்கள். வீட்டிற்கு வெளியிருந்து எந்தப் பொருட்களையும் உள்ளே சேர்க்க வேண்டாம்.
  • உதாரணமாக பால் பாக்கேட், பக்கத்து வீட்டு சாம்பார் பாத்திரம் முதற்கொண்டு எல்லாமே பிறர் கைபட்ட பொருள்கள் தான். அத்தியாவசியமின்றி பிறர் கைபட்ட எதையும் தொடாதீர்கள். பிறர் என்பது உங்களைத் தவிர எல்லாரையும் குறிக்கும். உங்கள் அம்மா, மனைவி, குழந்தைகள் கூட பிறர் தான்.
  • உங்களுக்கு சளியோ, இருமலோ, காய்ச்சலோ இல்லாமல் இருக்கலாம். அதற்காக நோய்த்தொற்று இல்லை என்று அர்த்தம் அல்ல. நோய்க்கிருமி உடலுக்குள் நுழைந்த பின் அறிகுறிகள் வர 2 முதல் 15 நாள்கள் ஆகும். இதைத் தான் இன்குபேசன் பீரியட் என்போம். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே வீட்டுக்குள்ளேயே இருப்பேன் என்று வெளியில் நடமாடினால் இன்குபேசன் பீரியடில் நீங்கள் செல்லும் இடமெல்லாம் மற்றவர்களுக்கும் கிருமி பரவும்.
  • சாதாரண சளிதான் எனக்கு ஒன்றும் ஆகாது என்று அலட்சியமாக இருக்காதீர்கள். மாத்திரைகள் கொண்டு தும்மல், இருமலைக் குறைப்பது நோய் பரவலைக் குறைக்கலாம். உங்கள் உடல் வேண்டுமானால் எதையும் சாதாரண சளியாகவே கடத்துவிடலாம். ஆனால் உங்களிடம் இருந்து நோய்க் கிருமியை வாங்கும் எல்லாருக்கும் அப்படியே சாதாரணமாக கடந்து விடாது. அது அவர்களின் உயிரையே பறிக்கலாம்.
  • அனைவருமே சுடுதண்ணீர் வைத்து குடியுங்கள். ஐஸ்க்ரீம், குளிர் பானம், பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். இவையெல்லாம் சாதாரண சளி ஏற்படுத்தினாலும் நமக்கு வீண் பயமும் பீதியும் உண்டாக்கும்.
  • ஊருக்குப் போனதும் நண்பர்களைக் காணச் செல்லாதீர்கள். தயவுசெய்து எல்லாருமே வீட்டிற்குள்ளேயே இருங்கள். இப்போது சொன்னது எல்லாம் ஊருலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் பொருந்தும்.
  • தயவுசெய்து அரசும் மருத்துவர்களும் சொல்வதைக் கேளுங்கள். அறிவியலுக்கு எதிரான, மருத்துவர்கள் சொல்வதற்கு எதிரான எதிரான எதையும் செய்யாதீர்கள். தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்.
  • சந்தேகங்கள் இருந்தால் உதவி மையத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள் (044 29510 500)
  • மனித நேயமமும் சுய ஒழுக்கமும்தான் நம்மைக் காக்கும். கட்டாயமாக அனைவரும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.