ETV Bharat / state

SPECIAL - அணைக்காக உயிர்த்தியாகம் செய்த சிறுமி - 1000 ஆண்டுகளாக கொண்டாடப்படும் நல்லம்மாள்! - மங்கலம் அணை

திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள மங்கலம் நல்லம்மன் அணையின் வரலாற்றையும், சிறப்பையும் இந்த அணைக்காக உயிர்த் தியாகம் செய்த ஒரு சிறுமியின் கதையையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மங்கலம் நல்லம்மன் அணை மற்றும் கோயில்
மங்கலம் நல்லம்மன் அணை மற்றும் கோயில்
author img

By

Published : Aug 3, 2023, 4:01 PM IST

திருப்பூர்: ஆடிப்பெருக்கு காவிரிக் கரையோரமும், அதன் துணை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஆடி மாதம் 18ஆம் தேதி இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வரும் வேளையில், ஆறுகளை வழிபட்டு, கோயில்களில் வழிபாடு செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.

காவிரியின் துணை ஆறுகளான பவானி, நொய்யல் ஆறுகள் பாயும் மாவட்டங்களிலும் இந்தப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றங்கரை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்றளவும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இப்படி ஆற்றையும், ஆற்றுவழி நீரையும் கொண்டாடும் நம்மவர்கள், நொய்யல் ஆற்றின் தடுப்பணை ஒன்றுக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மாள் என்கிற சிறுமிக்கு கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வருகிறார்கள். அதாவது, காவிரி ஆற்றின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் பாசனத்திட்டம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கொங்கு சோழர்கள் காலத்தில் (கி.பி 1000 - கி.பி 1200) சிறப்பாக கட்டமைக்கப்பட்டது.

நொய்யல் ஆறு உருவாகின்ற கோவை, பூண்டி அடிவாரத்திற்கு அடுத்து, சித்திரைச் சாவடி தடுப்பணையில் ஆரம்பித்து கரூரில் காவிரியில் கலக்கிற இடம் வரை 32 தடுப்பணைகளையும், 40 குளங்களையும் வெட்டி இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு குளத்துக்கும் தண்ணீர் நிரம்பிய பிறகு மீண்டும் ஆற்றுக்கே தண்ணீரை வரச்செய்து அடுத்த குளத்துக்கு செல்வதற்கேற்ப வாய்க்கால்கள், குளங்களை வெட்டி உள்ளனர்.

இதனால் தான் நொய்யல் ஆற்றுப்பாசனத் திட்டம் சிறப்பான பாசனத்திட்டமாக கருதப்படுகிறது. ‘எங்கே என் பேரூர் பெரிய மகளை காணோமே’ என்று காவிரித்தாய் கூட நொய்யல் ஆற்றில் வெள்ளம் வர காத்திருப்பாள் என்று கொங்கு பகுதிகளில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இப்படி கொங்கு சோழர்கள் கட்டிய தடுப்பணைகளில் ஒன்றாக இருப்பது தான் 'மங்கலம் நல்லம்மன் தடுப்பணை'.

வெள்ளஞ்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள இந்த தடுப்பணை கட்டும்போது நடுவில் ஒரு இடத்தில் ஆற்று நீரின் வெள்ளப்போக்கால் அணை கட்டுமானம் உடைந்து கொண்டே இருந்ததாகவும், நல்லம்மாள் என்கிற சிறுமியின் உயிர்த்தியாகத்துக்கு பின்னர் இந்த அணை உடைவது முழுவதுமாக நின்று உள்ளது.

அணைக்காக அங்கு உயிர்த்தியாகம் செய்த சிறுமி நல்லம்மாளுக்கு அணை நடுவில் கோயில் கட்டி, ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் நல்லம்மனுக்காக பொம்மை, கிலுகிலுப்பை எல்லாம் வைத்து படையல் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

மற்ற நாட்களில் யாரும் இல்லா வெட்டா வெளியாக கிடக்கும் இந்தப் பகுதியில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா, ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை தினங்களில் நடைபெறும் பூஜைகளில் பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் நொய்யல் ஆற்று வெள்ளம் இந்த தடுப்பணையில் நிரம்பி வழிந்து, நல்லம்மன் சிலையை நனைக்கும்.

ஆனால், இந்த ஆண்டு மழை குறைவாக இருப்பதால் தண்ணீரை இன்னும் காணவில்லை. ஆடிப்பெருக்கு நாளான இன்று ஒரு சிலர் மட்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றார்கள். சுமார் 20 அடி உயரத்தில் 1000 அடி நீளத்தில் உள்ள இந்த அணை இன்றளவிலும் கம்பீரமாக நிற்கிறது. இந்த அணையில் தடுக்கப்படும் தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக ஆண்டிபாளையம் குளத்துக்குச் செல்கிறது.

அணையின் கல் கட்டுமானம் நன்றாக இருந்தாலும் நீர்த்தேக்கப் பகுதி முழுக்க முழுக்க மண்மூடி புதர்க்காடாய் கிடக்கிறது. இதையெல்லாம் சுத்தம் செய்தால், இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் பயன் பெறும். இது தவிர நல்லம்மன் தடுப்பணைக்கு மேற்கே உள்ள பகுதிகளில் ஏராளமான சாய, சலவைப் பட்டறைகள் உள்ளன.

இவற்றில் இருந்து சாய கழிவு அப்படியே ஆற்றில் விடப்படுவது தொடர்வதாகவும், இதற்காக ஆற்று நீரோட்டம் வரை சாய ஆலைகள் குழாய்களை அமைத்து உள்ளதாகவும் இந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வருட ஆடிப்பெருக்கு நாளில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வராவிட்டாலும் இன்னும் சில நாட்களிலேயே தண்ணீர் வரும் என்றும்; நல்லம்மன் குளிர்வாள் என்றும் தெரிவிக்கின்றனர், அங்கு சாமி கும்பிட வந்த நல்லம்மனின் வழித்தோன்றல்கள்.

இதையும் படிங்க: Aadi Perukku: தஞ்சையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்.. காவிரியில் புனித நீராடிய மக்கள் தக்காளி விலை குறைய வேண்டுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.