சென்னை: கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவ-26)சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், கலைப்புலி தாணு, கருணாஸ், கென் கருணாஸ், சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, சீனு ராமசாமி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, ‘இப்படத்துகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நம் குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகள் வரும் காலத்தில் மறுக்கப்பட்டு வருவதை இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நம் மொழிக்கான உரிமை பறிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு மாபெரும் தலைவனின் பெயரைக்கூட சொல்வதற்கு ஒரு அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதைவிட கேவலம் எதுவுமில்லை.
இது ஒரு ஜனநாயக ஆட்சியே அல்ல. தமிழர்கள் இன உணர்வோடு இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அழிந்து போன சமஸ்கிருத மொழிக்கு நிதி வழங்குகிறார்கள். இந்த அரசு எதைக்கண்டு அஞ்சுகிறதோ அதனை திரும்ப திரும்ப செய்வதுதான் நமது வேலை. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை பற்றி இங்குள்ள இலக்கியவாதிகள் யாருமே எழுதவில்லை. படைப்புலகமே அமைதியாக இருந்தது’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை