பாஜகவைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன. விசிக மட்டுமே மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம், சகோதரத்துவம் இவையனைத்துக்கும் எதிரானது மனுநூல். சமத்துவத்தை நோக்கிச் செல்கிறது விசிக.
நான்கு மணி நேர பேச்சை 40 நொடிகளில் போட்டார்கள். 40 நொடிகள் யாரு கேட்டாலும் கோபம் வரும். As per தர்மா என்ற வார்த்தை கூறியுள்ளேன். அதை அவர் கட் செய்யவில்லை. "As per தர்மா" நான் கூறியது அந்த வீடியோவில் இருப்பதால் அனைவரும் திருமாவளவன் தர்மா என்ன கூறுகிறதோ அதே தான் கூறுகிறார், அது அவருடைய சொந்த கருத்து இல்லை என்று புரிந்துகொள்கின்றனர்
ஓபிசிக்கு இட ஒதுக்கீடு பற்றி பேசிய முதல் கட்சி விசிக. பாஜக சமூக நீதிக்கு அகில இந்திய அளவில் எப்போதும் போராட்டம் நடத்தியது.
விபச்சாரன் என ஆணுக்கு ஏன் பெயர் சூடவில்லை. பெண்களை ஒடுக்கவே விபச்சாரி என்று எடுத்துக் கொண்டுவந்தார்கள். பெண்களுக்கான போராட்டம் இது. இதை பெண்கள் புரிந்து கொள்ளும் வரை போராடுவோம். நாங்கள் மனுநூலை பற்றி விவாதிக்க இந்தத் தேர்தலிலிருந்துகூட விலகிக்கொள்கிறோம். எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளிலும் 90 விழுக்காடு பேர் இந்துக்கள்தான்.
தமிழ்நாட்டை பாஜக வன்கொடுமையாக்க போராடிக்கொண்டிருக்கிறது. ராமரை வைத்து இங்கு கலவரத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஏன் என்றால் ஏற்கனவே இங்கு ராமசாமி உள்ளார். அதனால், முருகனை வைத்து ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
சாதி வைத்தும், விஜய், விஜய் சேதுபதி, சூர்யா வைத்து கொண்டு பாஜக போராடி கொண்டு இருக்கிறது. ரத யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!