மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3ஆம் தேதி வேப்பேரியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நாகராஜன் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சூழ்நிலையில், இன்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், மூன்றாவதாக ஆயுதப்படை காவலர் நாகராஜன் உயிரிழந்துள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் கரோனா தொற்றால் 308 பேர் சிகிச்சைக்காக அனுமதி!