ETV Bharat / state

'கீழடி நாகரிகத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது' - அமைச்சர் தகவல் - Chennai Art Gallery

சென்னை: கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், இதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமை மறுவாழ்வு நிகழ்ச்சி
author img

By

Published : Oct 17, 2019, 9:00 AM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனியார் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1200 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டில் கொத்தடிமை முறையை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 65ஆயிரத்து 573 பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கொத்தடிமைகளாக மனிதர்களை பயன்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.

கொத்தடிமை மறுவாழ்வு நிகழ்ச்சி

கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகளையும், வரும் 23ஆம் தேதி ஏற்கனவே கீழடியில் சேகரிக்கப்பட்ட பொருட்களையும் பொதுமக்களின் பார்வைக்காக மதுரையில் காட்சிப்படுத்த உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 70 இடங்களில் தமிழ்நாடு அரசும், 120 இடங்களில் மத்திய அரசும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். கீழடி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான். அதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது’ என்றார்.

இதையும் படிங்க:வேலூரில் அருகே கொத்தடிமைகளாக இருந்த 15 பேர் மீட்பு

Intro:Body:கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், இதை வைத்து பிரிவினை ஏற்படுத்த கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1200 பேரை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் கொத்தடிமை முறையை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,கடந்த 8 ஆண்டுகளில் 65573பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார். கொத்தடிமைகளாக மனிதர்களை பயன்படுத்திவர்களுக்கு தண்டனை வழங்குவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது.கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகளை வரும் 23 தேதி ஏற்கனவே கீழடியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக மதுரையில் காட்சிப்படுத்த உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் அல்லது துணை முதல்வர் இந்த அறிக்கையை அப்போது வெளியிடுவார் என்றார். தமிழகத்தில்70 இடங்களில் தமிழக அரசும் 120 இடங்களில் மத்திய அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். கீழடி 6ம் கட்டம் அகழாய்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் எனவும் அது விரிவான அகழாய்வாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கீழடி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான் அதை வைத்து பிரிவினை ஏற்படுத்த கூடாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.